பாடசாலை மாணவர்களுக்கென ஜனாதிபதி தலைமையில் சிறப்பு திட்டம்!

Saturday, July 20th, 2019

ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால் பக்கெட்டுகளை வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரத்தினபுரி – கஜூகஸ்வத்த சாந்திரோதைய வித்தியாலயத்தில் இடம் பெறவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் சட்டத்தரணி சிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டளவில் உற்பத்தியில் தன்னிறைவடைந்த தேசத்தை உருவாக்குவதும், ஆரம்ப பாடசாலைமாணவர்களின் போஷாக்கு மட்டத்தை உறுதிப்படுத்துவதுமே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Related posts: