பாடசாலை மாணவர்களுக்கு இன்றுமுதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் – கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Friday, October 15th, 2021

இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில், 18 மற்றும் 19 வயது பாடசாலை மாணவர்களுக்கு இன்றுமுதல் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.

அதற்கிணங்க, மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

அதனடிப்படையில் முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டமானது இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, ஹோமாகம, ஸ்ரீஜயவர்த்தனபுர, பிலியந்தல ஆகிய கல்வி வலயங்களில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: