பாடசாலை நிர்வாகம் பாடசாலைச் சபையிடம் – புதிய திட்டம் தயாரிக்கிறார் கல்வி அமைச்சர்!

ஒவ்வொரு பாடசாலையையும் நிர்வாகிப்பதற்கென அந்தப் பாடசாலையை ஒட்டி ஒரு சபை அமைக்கப்படும் . அத்தகைய சபைகளை அமைப்பதற்கான திட்டம் தயாராகி வருகின்றது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தகவல் வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே இத் தகவலை அவர் வெளியிட்டார். பாடசாலை வலயமைப்பிற்குள் செயற்படும் கட்டமைப்பு மூலமே பாடசாலைகளை நிர்வகிக்கக் கூடிய விதத்தில் பாடசாலை நிர்வாகத்தைப் பலப்படுத்துகின்ற கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இத்தகைய சபைகளை அமைப்பதங்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பமாகியுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும் மேலதிக விவரங்கள் தெரியவில்லை.
Related posts:
ஏ.டி.எம் இல் பணம் எடுக்கும் போது 5 ரூபா புதிய வரி அறவீடு செய்யப்படமாட்டாது – நிதி அமைச்சர்!
சமூக மட்டத்தில் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்கள் - அரசாங்க மருத்துவர்கள் விடுத்துள்ள அபாய எச்சர...
மாகாண சபைத் தேர்தல் - தேவையான சட்டரீதியான திருத்தங்களை துரிதமாக மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற விசேட குழ...
|
|