பாடசாலை சீருடை துணிகளை மாணவர்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு அரசு தீர்மானம்!

Thursday, June 11th, 2020

பாடசாலை சீருடை கூப்பனுக்கு  பதிலாக அடுத்த ஆண்டுமுதல் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் இலவச சீருடைகளை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

கடந்த அரசின் ஆட்சி காலத்தில் பாடசாலை சீருடை வழங்குவதற்கு பதிலாக சீருடை கூப்பன்களே  வழங்கப்பட்டு வந்தது.

இதனடிப்படையில் சீருடை கூப்பன்களை கடைகளில் கொடுத்து பாடசாலை சீருடை துணிகளை மாணவர்கள் பெற்றுவந்தனர்.

இந்நிலையில் அந்த முறையை மாற்றி மீண்டும் பழையமுறைப்படி பாடசாலை சீருடை துணிகளை மாணவர்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தேர்தலுக்காக சகல ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
புற்றுநோய் சிகிச்சைக்காக பல மில்லியன் ரூபாவில் கொள்வனவு செய்யப்பட்டும் பயன்படாத இயந்திரம் - தெல்லிப்...
யாழ்ப்பாண மாவட்ட பட்டதாரி பயிலுனர்களாக உள்வாங்கப்பட்ட 2078 பேரில் இதுவரை பேர் மட்டுமே பொறுப்பேற்றுள்...