பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மையானதல்ல – கல்வியமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
Saturday, June 5th, 2021நாட்டில் அதிகரித்துள்ள கொரோனான தொற்று காரணமாக பாடசாலைச் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் 4 கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் பொய்யானது என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய கொவிட் பரவல் நிலைமைக்கு மத்தியில், பாடசாலைகளை மீள திறப்பது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடந்த 40 நாட்களில் 8697 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!
ஜப்பானின் போர்க்கப்பல்களை பார்வையிட்டார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் !
தொடர் மழை - வயிற்றுப்போக்கு நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரி...
|
|