பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நம்பிக்கை!

Saturday, July 10th, 2021

கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக நாடு முழுவதும் 100இற்கு குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் 2 ஆயிரத்து 962 பாடசாலைகளை திறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்கும் நோக்குடன் ஜுலை மாதம் 12 ஆம் திகதிமுதல் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டுள்ளது.

சுமார் 2 இலட்சத்து 42 ஆயிரம் ஆசிரியர்கள் இருக்கின்ற போதிலும், பெரும்பாலான ஆசிரியர்கள் தற்போதே தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, 100 மாணவர்களுக்கு குறைவாக இயங்கும் பாடசாலைகளை ஆகஸ்ட் மாதமளவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

000

Related posts: