பாடசாலைகளுக்கு அரச விடுமுறை வழங்கப்பட மாட்டாது – கல்வி அமைச்சின் அதிகாரிகள் அறிவிப்பு!

Monday, May 9th, 2022

இலங்கையில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று அரச விடுமுறை வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழமை போன்று பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவி விலகக் கோரி திங்கட்கிழமைமுதல் வெள்ளி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதனால் இன்று பாடசாலை திறக்கப்படாது என வதந்திகள் பரவியதை அடுத்து, அரசாங்கத்தால் விடுமுறை வழங்கப்படவில்லை மற்றும் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளமை கறிப்பிடத்தக்கது.

000

Related posts:


கொரோனா தொற்று : இலங்கையில் 98 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - தேசிய உளவுத்...
முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் கையளிப்பு – இராஜாங்க அமைச்சர் ...
மன்னாரில் மற்றுமொரு புதிய காற்றாலை - கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அம...