பாக்கிஸ்தான் கடற்படை அதிகாரி இலங்கை வருகை !

Saturday, January 25th, 2020பாக்கிஸ்தான் கடற்படையின் தலைமை அதிகாரி Zafar Mohmood Abbasi இலங்கை வருகிறார்.

எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை வரும் அவர் 29ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி இருப்பார்.

இலங்கை கடற்படை தளபதியின் அழைப்பில் இலங்கை வரும் அவர் இலங்கையில் ஜனாதிபதி உட்பட படை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார்.

1979இல் பாக்கிஸ்தான் கடற்படையில் இணைந்த அவர் பிரித்தானியாவில் பயிற்சி பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவிலும் பயிற்சி பெற்றுள்ளார். பாக்கிஸ்தான் கடற்படையில் பல உயர் பதவிகளை வகித்த அவர் பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் உயர் படை விருதான நிஷான் இம்தியாஸ் விருதையும் பெற்றுள்ளார்.

Related posts: