பாகிஸ்தான் குடும்பத்தை நாடு கடத்த வேண்டாம் – இலங்கை அரசாங்கத்திடம் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை!

Thursday, June 6th, 2019

விசா முடிந்த பின்னரும் இலங்கையில் தங்கியிருந்தமைக்காக கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் குடும்பத்தை நாடு கடத்த வேண்டாமென இலங்கை அரசாங்கத்திடம் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.

11 – 57 வயதிற்குட்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தானிய கத்தோலிக்கக் குடும்பம் அவர்களது நாட்டில் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கிய காரணத்தினால் தப்பியோடி வந்து இலங்கையில் தஞ்சம் கோரியுள்ளது.

இநிலையில் குறித்த குடும்பம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை உடனடியாக நாடு கடத்துவதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் அறியவருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு , அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் குறித்த குடும்பத்தினரைப் பலவந்தமாக அங்கு திருப்பியனுப்புவது அவர்களை ஆபத்திற்குள் தள்ளுவதாகவே அமையும் என்றும் மன்னிப்புசபை சுட்டிக்காட்டியுள்ளது