பசுவதை சட்டத்தை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் விஷேட நிகழ்வு!

Wednesday, September 30th, 2020

இலங்கையில் பசு வதையை தடை செய்வதற்கு நேற்று முன்தினம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதை வரவேற்று அதற்கு ஆதரவு கொடுக்கும் முகமாக நாளையதினம் முதலாம் திகதி  யாழ்ப்பாணத்தில் சிறப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள  நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் நாளை பிற்பகல் 3 மணிக்கு பண்டிதர் பேரின்பநாயகம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.  

முன்பதாக இலங்கையில் பசு வதையை தடை செய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜாக்ஷவினால்   அமைச்சரவையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும்.

பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் பசும் பால் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு போதுமான பசுக்கள் இல்லாமையால் இந்த தொழிற்துறையின் வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்து.

இந்நிலைமையை கவனத்திற் கொண்டு பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: