பழைய முறைமையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தெரிவுக்குழு இணக்கம் – தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
Friday, February 25th, 2022புதிய முறைமை கொண்டுவரப்படும் வரையில் பழைய முறையின் கீழ் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
அனைத்து தேர்தல்களும், தொகுதிவாரி முறைமையின் கீழ் 60 சதவீதமும் மற்றும் விகிதாசார முறைமையின் கீழ் 40 சதவீதமும் இணைந்த கலப்பு தேர்தல் முறைமைக்கு ஏற்ப நடத்தப்பட வேண்டுமெனவும், புதிய முறைமை கொண்டுவரப்படும் வரையில், பழைய முறைப்படியே தேர்தல் நடத்தப்பட வேண்மென்றும் இணக்கம் காணப்பட்டதாக அக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (24) இடம்பெற்ற தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுன்ற தெரிவுக்குழு கூட்டத்தின்போது, இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தெரிவுக்குழு எதிர்வரும் மார்ச் முதலாவது வாரத்தில் மீண்டும் கூடவுள்ளதாகவும் அக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனைத்து தேர்தல்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25% ஆக இருக்க பரிந்துரைப்பது மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்குதல் என்ற முன்மொழிவுக்கும் இதன்போது கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்டபிடத்தக்கது.
Related posts:
|
|