பழரச தொழிற்சாலையின் அபிவிருத்திக்கு ஏற்பாடு!

Tuesday, June 12th, 2018

சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஐசுபி பழரசத் தொழிற்சாலையின் அபிவிருத்திக்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று யாழ்ப்பாணத்துக்கான இந்தியக் கொன்சூலர் ஜெனரல் எஸ்.பாலச்சந்திரன் உறுதியளித்துள்ளார்.

ஐசுபி பழரசத் தொழிற்சாலைகளுக்குச் சென்ற இந்தியக் கொன்சூலர் ஜெனரல் அங்கு பழரசத் தொழில்சாலையின் செயற்பாடுகள், அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடினார்.

சங்கத்தின் தலைவர் சி.குமரவேல் மற்றும் சங்க அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஐசுபி பழரசத் தொழிற்சாலையின் எதிர்கால அபிவிருத்திக்குத் தேவையான உதவிகளையும் துறைசார்ந்த பயிற்சிகளையும் வழங்குவதற்கு ஏற்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் இதன்போது கூறினார்.

சங்கத்தின் பொது முகாமையாளர் ம.சுரேஸ், பதில் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ச.சியாமளா கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பாலரவி, ஐசுபி தொழில்சாலை முகாமையாளர் சி.சிவகுமார் போன்றோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Related posts: