பல அரச நிறுவனங்களை ஒன்றாக இணைக்கவும், சில நிறுவனங்களை தனியார் மயமாக்கவும் நடவடிக்கை!
Sunday, January 22nd, 2023பல அரச நிறுவனங்களை ஒன்றாக இணைக்கவும், சில நிறுவனங்களை தனியார் மயமாக்கவும் திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இயந்திர நிறுவனங்கள் மற்றும் பொறியியல் கூட்டுத்தாபனம் போன்றவற்றை ஒன்றிணைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
நிறுவன மறுசீரமைப்புக்காக குறித்த நிறுவனங்களின் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் தொடர்ந்து வைத்திருக்கவும், ஏனைய ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையை நஷ்ட ஈடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய விழா தொடர்பில் தமிழக முதல்வர் இந்திய பிரமருக்கு கடிதம்!
இலங்கையில் 7 நட்சத்திர சொகுசு கட்டிடத் தொகுதி!
கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!
|
|