பல்கலை.மாணவர் படுகொலை: வட, கிழக்கில் வழக்கு வேண்டாம் வேறு நீதிமன்றுக்கு மாற்ற கோரிக்கை!
Wednesday, May 31st, 2017
யாழ். பல்கலைக்கழ மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை வடக்கு மற்றும் கிழக்கைத் தவிர்ந்த ஏனைய மாகாணத்திலுள்ள நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு பிரதிவாதிகளால் கோரப்பட்டுள்ளது.
மேற்படி படுகொலையுடன் தொடர்புடைய 5 பொலிஸார் தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. ஆனால் அதை வேறிடத்திற்கு மாற்றுமாறு சந்தேகநபர்களான பொலிஸார் தரப்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் ஜுலை மாதம் 30 ஆம் திகதி அது விசாரணைக்கு எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இதேவேளை இந்த மனுவிற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எதிர்ப்பு மனுவொன்றும் நேற்று தாக்கல் செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.
Related posts:
போலி கடவுச்சீட்டு தயாரிப்பில் ஈடுபட்ட கும்பல் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர சோதனை!
அதிகாரப் பகிர்வால் நாடு பிளவுபடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - தங்களை, தாங்களே ஆளும் மனநிலை தமிழ்...
|
|