பல்கலைக்கழக விண்ணப்பப்படிவம் நிரப்புதல் தொடர்பான செயலமர்வு!

Monday, January 15th, 2018

கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளில் இருந்து 2017 இல் க.பொ.த (உ.த) பரீட்சைக்குத் தோற்றி அண்மையில் வெளியான பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்ற வணிகத்துறை மாணவர்களுக்கான பல்கலைக்கழக விண்ணப்பப்படிவம் நிரப்புதல் தொடர்பான செயலமர்வு கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தால் நடத்தப்படவுள்ளது.

இச் செயலமர்வு இன்று திங்கட்கிழமை பி.ப ஒரு மணிக்கு கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள ஆசிரிய மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இச் செயலமர்வில் வணிகத்துறை மாணவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய 31 கற்கை நெறிகள், அவற்றுக்கான அடிப்படைத் தகைமைகள், அக்கற்கை நெறிகளின் விருப்பொழுகைத் தெரிவு செய்தல், மேலதிக உளச் சார்புப் பரீட்சையினூடாக விண்ணப்பிக்கக் கூடிய பொதுவான கற்கை நெறிகள், இக்கற்கை நெறிகள் தொடர்பான அண்மைக்காலப் போக்குகள் என்பன தொடர்பாக துறைசார் வளவாளர்களால் விளக்கமளிக்கப்படவுள்ளது.

எனவே, இச்செயலமர்வில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்ற வணிகத்துறை மாணவர்களையும், பொறுப்பாசிரியர் ஒருவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts: