பலமான கடவுச்சீட்டு :முன்னிலையில் ஜேர்மன் – இலங்கைக்கு பின்னடைவு!

Sunday, May 14th, 2017

2017ஆம் ஆண்டுக்கான பிரபல குடிவரவு குடியகல்வு மற்றும் கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கைக்கு 85வது இடம் கிடைத்துள்ளது.91 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த சுட்டெண் வெளியிடப்பட்டுள்ளது.

ஜேர்மன் மற்றும் சிங்கப்பூர் அந்த பட்டியலில் உலகின் மிக பலமான கடவுச்சீட்டு கொண்ட நாடுகளாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நாடுகளின் வெளிநாட்டு கடவுசீட்டுகளை பயன்படுத்தி, விசா இன்றி 159 நாடுகளுக்கு பயணிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.இலங்கை கடவுச்சீட்டில் விசா இன்றி 37 நாடுகளுக்கு மாத்திரமே பயணிக்க முடியும்.குறித்த சுட்டெண்ணில் சுவீடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அந்த கடவுசீட்டை பயன்படுத்தி 158 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும்.

இந்த சுட்டெண்ணில் டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், நோர்வே, ஐக்கிய ராஜ்ஜியம், தென் கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்த நாடுகளின் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி விசா இன்றி 157 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுட்டெண்ணிற்கமைய எத்தியோப்பியா, நைஜீரியா, மியான்மர் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இலங்கையை விடவும் முன் இடத்தில் காணப்படுகின்றது.

குடிவரவு குடியகல்வு மற்றும் கடவுச்சீட்டு சுட்டெண்ணில் 84வது இடத்தை பிடித்துள்ள எத்தியோப்பியா கடவுச்சீட்டில் விசா இன்றி 38 நாடுகளுக்கு பயணிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

அந்த சுட்டெண்ணில் 80வது இடத்தை பிடித்து நைஜீரியா கடவுச்சீட்டில் விசா இன்றி 43 நாடுகளுக்கு பயணிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.82 இடத்தை பிடித்துள்ள மியன்மார் கடவுச்சீட்டில் விசா இன்றி 41 பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அந்த சுட்டெணில் 53வது இடத்தை பிடித்துள்ள மாலைத்தீவு கடவுச்சீட்டில் விசா இன்றி 53 நாடுகளுக்கு பயணிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

குறித்த சுட்டெண்ணில் சுவீடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அந்த கடவுச்சீட்டை பயன்படுத்தி 158 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும்.

Related posts: