பருவகால நெற் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு போதுமானளவு உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன – அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு!

Thursday, May 13th, 2021

பருவகால நெற் பயிர்ச்செய்கையை  முன்னெடுப்பதற்கு போதுமானளவு  உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு  விநியோகிகிப்பட்டு வருவதாக  விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தது.

அரசாங்கத்தின் முடிவை அறிவித்ததன் பின்னர், உரங்களைப் பெறுவதற்கு விவசாயிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான நிவாரணத்தை வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: