பருத்தித்துறை மருத்துவமனையில் கண் சிகிச்சை 2 வாரங்களுக்கு இல்லை மருத்துவர் இன்மையே காரணம்!

Thursday, December 14th, 2017

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் கண் பரிசோதனையாளர் நியமிக்கப்பட்டள்ள போதிலம் கண் மருத்துவர் இல்லாததனால் இருவாரங்களுக்கு கிளினிக் நடாத்தப்படுவது தள்ளிப்போடப்பட்டுள்ளது.

மந்திகை ஆதார மருத்துவமனைக்க கொழும்பு சகாதார அமைச்சால் கண் பரிசோதனையாளர் நியமிக்கப்பட்டு நேற்றுக்கடமைகளைப் பொறுப்பேற்றார். ஆனால் மருத்துவமனையில் நிரந்தர கண்சிகிச்சை நிபுணர் இல்லை. இதனால் இரண்டுவாரப் பயிற்சியின் பின்னரே சிகிச்சைப்பிரிவு இயங்கும் என்று மருத்தவமனைத்தரப்புத்தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு ஆதார மருத்துவமனைகள் உள்ளபோதிலும் அவற்றில் கண்சிகிச்சை நிபுணர்கள் இல்லாததால் யாழ்ப்பாணும் போதனா மருத்துவமனையில் கடமையாற்றி ஓய்வுபெற்ற கண்சிகிச்சையளித்து வந்துள்ளார். அவர் கடந்த மாதம் கடமையிலிருந்து விலகிக்கொண்டதால் நான்கு மருத்துவ மனைகளிலும் கண்சிகிச்சைப்பிரிவுகளிலும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  இதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குச் சென்று கண்சிகிச்சை பெற்ற வருகின்றனர.

மந்திகை அதார மருத்த்தவமனை நிர்வாகம் மருத்துவ மனை அபிவிருத்திச்சங்கம் மற்றும் வடமராட்சி பிரதேச பொது அமைப்புக்கள் விடத்த வேண்டுகோளையடுத்து கொழும்பு சுகாதார அமைச்சு கண் பரிசோதனையாளர் ஒருவரை நியமித்தது. இவர் நேற்றுக்கடமைகளை பொறப்பேற்றுக் கொண்டார்.

மரத்துவ மனையில் ஞாயிறு மற்றம் பொது விடமுறை நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் கண்பரிசோதனைகள் நடைபெறும் என மருத்துவமனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் பார்வையில் குறைபாட காணப்படும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனையில் நடத்தப்படும் கிளினிக்கில் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: