பருத்தித்துறை பஸ் நிலையத்தில் CCTV!  

Thursday, August 17th, 2017

பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மோட்டார் சைக்கிளில் இருந்து, இரவுவேளையில் எரிபொருட்கள் திருட்டுப் போவதாக, ஊழியர்கள் தெரிவித்துவருகின்றனர்.

வெளிமாவட்டங்களுக்கான பஸ் சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள், சாலையில் நிறுத்திவிட்டுச் செல்லும் மோட்டார் சைக்கிள்களில் இருந்தே இவ்வாறு எரிபொருளைத் திருடி வருவதாக, ஊழியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, எரிபொருள் திருட்டைக் கட்டுப்படுத்த, வெளிப்புறப் பகுதிகளில் சீ.சீ.டி.வி.கண்காணிப்பு கமெராவைப் பொருத்த, சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: