பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட தொகை போதுமானதல்ல!

Tuesday, August 28th, 2018

தற்போது நடைபெற்று வரும் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் கடமை புரியும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு 1400 ரூபாவும் உதவி மேற்பார்வையாளர்களுக்கு 1100 ரூபாவும் நோக்குநர்களுக்கு 950 ரூபாவும் வழங்கப்பட்டன. எனினும் அண்மையில் இத்தொகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு மேற்பார்வையாளருக்கு 1500 ரூபாவும் உதவி மேற்பார்வையாளருக்கு 1300 ரூபாவும் நோக்குநர்களுக்கு 1200 ரூபாவும் உயர்த்தப்பட்டன. எனினும் தற்போதைய சூழ்நிலையில் அதிகரிக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லையென பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை பலரின் வெறுப்புகளையும் மீறி அனைத்து பரீட்சை மண்டபத்திற்கும் தலா ஒருவர் என்ற அடிப்படையில் மேலதிக பரீட்சை மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவான 1500 ரூபாய் வழங்கப்படுவதுடன் போக்குவரத்து கொடுப்பனவாக 600 ரூபாவும் மேலதிகமாக வழங்கப்படுகின்றன.

இதனை கருத்திற்கொண்டே பரீட்சை ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்படுகின்றன.

ஒரு பரீட்சை மண்டபத்தில் சகல பொறுப்புகளையும் பரீட்சை மேற்பார்வையாளரே மேற்கொள்வதுடன் சகல விடயங்களுக்கும் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கும் மேலதிக பரீட்சை மேற்பார்வையாளருக்கும் ஒரே தொகையான கொடுப்பனவுகள் வழங்குவது விசனத்திற்குரியது என்று பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related posts: