பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 73.84 சதவீதத்தினர் உயர்தரத்தில் கல்வியைத் தொடர வாய்ப்பு – பரீட்சைகள் திணைக்களம்!

Monday, April 27th, 2020

இன்று வெளியான .பொ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 73.84 சதவீதத்தினர் உயர்தரத்தில் கல்வியைத் தொடர வாய்ப்புப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், 10 ஆயிரத்து 346 மாணவர்கள் 9 பாடங்களிலும் திறமைச் சித்தியான ஏ பெற்றுள்ளனர் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற .பொ. சாதாரண தரப் பரீட்சையில் 5 லட்சத்து 56 ஆயிரத்து 256 பேர் தோற்றியிருந்தனர். அவர்களில் 10 ஆயிரத்து 346 மாணவர்கள் 9 பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்றுள்ளனர்.

கணித பாடத்தில் 66.82 சதவீத மாணவர்கள் சித்தியைப் பெற்றுள்ளனர். 73.84 சதவீதத்தினர் உயர்தரத்தில் கல்வியைத் தொடர வாய்ப்புப் பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: