பரீட்சை கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை!

Saturday, November 26th, 2016

கல்விப் பொது தராதர சாதாரண தரபரீட்சையை முன்னிட்டு சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சாதாரண தரபரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களை நடத்துவதும், கருத்தரங்குகள் – பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதும் நவம்பர் 30ம் திகதி நள்ளிரவு தொடக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மாதிரி வினாத்தாள்களை அச்சிடுவது, விநியோகிப்பது, பரீட்சை வினாத்தாள்களுக்கு உரிய விடைகளையோ, அதற்கு சமமான விடைகளையோ தருவதாக கூறி சுவரொட்டிகள் – துண்டுபிரசுரங்களை விநியோகிப்பது, அவற்றை வைத்திருப்பது போன்றவையும் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை எவரேனும் மீறும் பட்சத்தில் தொலைபேசியின் ஊடாக முறையிடலாம் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.முறையிட வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் பொலிஸ் தலைமையகத்தை அழைக்க வேண்டிய இலக்கம் 0112 421 111 .

பரீட்சை திணைக்களத்தின் இலக்கம் 1911 .

பொலிஸின் அவசர அழைப்பு இலக்கமான 119

847f89ed605bac1e097c60c6a0cf99ef_XL

Related posts: