பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் நலன்கருதி பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் – என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் !

நடைபெற்றுவரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை நிலைய சேவையாளர்களுக்காக புகையிரத சேவைகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
அத்துடன் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொடருந்து சேவைகள் இயங்கும் எனவும்,
அவை தவிர்ந்த பிரதான மார்க்கம் புத்தளம் மார்க்கம் மற்றும் களனி வெளி மார்க்கம் என்பனவற்றில் இடம்பெறவுள்ள அனைத்து தொடருந்து சேவைகளும் இன்று முதல் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுத்த கல்விஆண்டுக்கான பாடசாலைத் தவணைகள் குறித்து கல்வியமைச்சு அறிவிப்பு!
காசநோயை அறிந்துகொள்ளும் புதிய பரிசோதனை முறை!
அரச சேவையின் செலவீனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலை...
|
|