ஈரான் – இலங்கை இடையே நேரடியாக விமான சேவை – இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை!

Monday, May 14th, 2018

ஈரானுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

டெஹேரான் நகரத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எரிபொருள், தேயிலை மற்றும் சுற்றுலா துறையில் தற்போது காணப்படுகின்ற நிலையை மேலும் அதிகரிக்க இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர்.

இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த 50 வருடங்களுக்கு மேலாக ஈரான் ஆதரவு வழங்குகின்றது. இந்நிலையில், மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு துறையை புதுப்பிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ரயில்வே துறையை மேம்படுத்துவதற்காக ஈரான் அரசாங்கத்தின் ஆதரவு பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக இரண்டு நாடுகளுக்கு இடையிலும் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் அவதானம் செலுத்தியுள்ளனர்.

Related posts: