பரீட்சைகள் நடைபெறும் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

Friday, August 4th, 2017

ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சையும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையும் இடம்பெறும் பரீட்சை நிலையங்களில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சை நிலையங்களில் புகை விசிறுதல் முதலான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.இதேவேளை பரீட்சை நடைபெறும் தினங்களில் நுளம்புகளிலிருந்து பிள்ளைகளை பாதுகாக்க நுளம்புக்கடி தடுப்பு பூச்சுக்களை பூசி அனுப்புமாறு பரீட்சை திணைக்களம் பொதுமக்களை கேட்டுள்ளது.

நாடெங்கிலும் உள்ள இரண்டாயிரத்து 230 பரீட்சை நிலையங்களில் ஆகஸ்ட் 8ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை நடைபெறும். புலமைப்பரிசில் பரீட்சை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் ஆகஸ்ட் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது

Related posts: