பரீட்சைகளை ஒரே நேரம் நடத்தும் திட்டம் 2019 இல் நடைமுறையில்!

Friday, May 26th, 2017

2019ஆம் ஆண்டு தொடக்கம் உயர்தரப் பரீட்சையையும் சாதாரண தரப் பரீட்சையையும் ஒரே சமயத்தில் நடத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை கல்வியமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர்,

இலங்கையில் நடக்குதட மிகப் பெரிய பரீட்சைகளான உயர்தர, சாதாரண தர பரீட்சைகளை ஒரே நேரத்தில் நடத்துவதால் மாணவர்களுக்குப் பல்வேறு அனுகூலங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன் வெளிநாடுகளுக்கு உயர் கல்விக்காகவோ தொழிலுக்காகவோ செல்லும் இலங்கையர்களின் நலனைக் கருத்திற் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் பரீட்சை சான்றிதழின் பிரதியொன்றைச் சம்பந்தப்பட்ட தூதரகத்துக்கு வழங்குமாறம் அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம் வெளிநாடு செல்பவர்கள் தங்களது பரீட்சை சான்றிதழ்களில் மோசடி செய்வதை முற்றாகத் தடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts: