பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை – கல்வி அமைச்சு !

நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடி காரணமாக பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி காணப்பட்டாலும், அடுத்த இரு வாரங்களுக்குள் வழமைக்குத் திரும்பும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்புக்காக அனைத்துப் பாடசாலைகளிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கொக்குவில் சந்தி கடைத்தொகுதியில் தீ விபத்து!
டிக்கோயா வைத்தியசாலையை திறந்துவைத்தார் இந்தியப் பிரதமர்!
ஜனாதிபதி கோட்டபய இந்த ஆட்சிக் காலத்திலேயே ரிஷாட் பதியுதீனுக்கு தண்டனை – அமைச்சர் மஹிந்தானந்த அறிவிப்...
|
|