பரீட்சைகளுக்குரிய விண்ணப்பங்கள் அனைத்தும் இனி இணையம் மூலம் விண்ணப்பிக்க முடியும்!

Wednesday, February 12th, 2020

இலங்கை பரீட்சை திணைக்களம் மூலம் நடத்தப்படும் அனைத்து பரீட்சைகளுக்குமான விண்ணப்பங்களை இணையம் மூலம் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு முதல் இணையம் ஊடாக விண்ணப்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களுக்காகவும் ஐந்தாமாண்டு புலமை பரிசீல் பரீட்சை முதல் “அவசியமான மாணவர் இலக்கம்” வழங்கப்படும்.

இந்த இலக்கம் மூலம் மாணவர்களின் பரீட்சை முடிவுகள் தரவு கட்டமைப்பில் உள்ளடக்கப்படவுள்ளதாகவும், அந்த நடவடிக்கை மூலம் இலகுவாக அனைத்து தகவல்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள முடிவும் என பரீட்சை ஆணையாளர் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார். இதேவேளை பரீட்சைகளின் போது கால்குலேட்டர்களை பயன்படுத்த அனுமதி வழங்கவும் எதிர்பார்த்துள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: