அரச சேவைக்கான கட்டணமாக நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பு!

Monday, November 13th, 2017

அரச சேவைக்கான கட்டணமாக நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த கட்டணம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய கடவுச்சீட்டு, அடையாள அட்டை, தபால் கட்டணம், மிருகக்காட்சி சாலை கட்டணம், நீதிமன்ற சேவை கட்டணம் மற்றும் ஏனைய அனைத்து அரசாங்க சேவைகளின் கட்டணங்களும் நூற்றுக்கு 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் இந்த சேவைகளுக்கான கட்டணம் கடந்த 3 வருடங்களாக அதிகரிக்கப்படவில்லை. அவ்வாறு அதிகரிக்கப்படாத கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்து, உரையாற்றும் போது நிதியமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

Related posts:

அமரர் திருமதி கமலாவதி சிவபாலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தே...
மடு அன்னை தேவாலயத்தினை பாதுகாப்பதற்கான இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்தார் பிரதம...
அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசே...