பயிர்செய்யாத காணிகளை பயன்படுத்த புதிய திட்டம் – ஜனாதிபதி !

Friday, March 17th, 2017

நாட்டில் பயிர் செய்யப்படாத அனைத்து காணிகளையும் மீண்டும் பயிர்ச்செய்கைக்கு  உட்படுத்த முறையானதும் வினைத்திறன் மிக்கதுமான ஒரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென தெரிவித்துள்ளார்.

அம்பாந்தொட்டையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது நாட்டிலுள்ள காணிகளை உற்பத்தி நடவடிக்கைகளுக்கான சரியாகப் பயன்படுத்துவது அவசியமானதாகும். நாட்டில் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்கு அது மிகவும் முக்கியமான காரணியாகும். மனித உரிமையான காணி உரிமையைப் பெற்றுக்கொடுப்பதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாரபட்சமா நடந்து கொள்ள வேண்டாம். ஒவ்வொருவரது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப அல்லாமல் நாட்டுக்குப் பொதுவான அபிவிருத்தி நடவடிக்கைகளினூடாக இன்று நாட்டில் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. எத்தகைய தடைகள், சவால்கள் வந்தபோதும் அந்த நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லப்படும். இன்று இணக்க அரசாங்கம் முழு உலகிற்கும் முன்மாதிரியாக இருந்து வெற்றிகரமாகச் செயற்பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் இன்றையை விட நாளை அனைவரும் பேசுகின்ற ஒன்றாக இருக்கும்.

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் மற்றும் மத்தியதர விவசாய சமூகத்திற்கு குடியிருப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக கடந்த காலத்தில் வழங்கப்பட்ட மற்றும் மிக நீண்ட காலமாக அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட காணிகளின் சட்ட ரீதியான உரிமையைப் பெற்றுக்கொடுத்து 10 ஆயிரம் காணி உறுதிகள் இவ்வருடம் வழங்கப்படவுள்ளன.

Related posts: