பயண சீட்டுக்களை பெற்றுக் கொள்ளாத பயணிகளுக்கு நடவடிக்கை – மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர்!

Saturday, March 25th, 2017

பயண சீட்டுக்களை பெற்றுக் கொள்ளாத பயணிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இது தொடர்பாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை இதே வேலைத்திட்டம் கம்பஹா மாவட்டத்தில் இடம்பெறும். வியாழக்கிழமை களுத்துறை மாவட்டத்தில் இந்த வேலைத்திட்;டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதே வேளை கொழும்பு மாவட்டத்தில் பஸ் பயணிகளுக்கு பயண சீட்டு வழங்காத 235 தனியார் பஸ் நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவிககையில்  நேற்று அதிகாரசபையின் அதிகாரிகள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது  235 தனியார் பஸ்வண்டி நடத்துனர்களு;ககெதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இவர்களுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. ஆதன்  போது 699 தனியார் பஸ் வண்டிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.

Related posts: