பயணிகளுக்கு பயணச் சீட்டை வழங்க அனுமதி கோருகிறது புகையிரத திணைக்களம் – நாளை தீர்வு கிட்டும் என எதிர்பார்ப்பு!

புகையிரத பயணத்தின் போது பயணிகளுக்கு டிக்கெட்டுகளை வழங்குவது தொடர்பில் நாளை கூடும் கொவிட் -19 தடுப்பு செயலணியிடம் அனுமதி பெறப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் இது தொடர்பில் அனுமதி வழங்கப்படும் என நம்புவதாகவும் புகையிரத பொது முகாமையாளரான தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாகாணங்களுக்கிடையிலான புகையிரதங்களையும் இயக்குவதற்கு அனுமதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
பருவச் சீட்டு வைத்திருப்பவர்கள் மாத்திரமே புகையிரதங்களில் பயணிக்க கொரோனா தடுப்பு பணிக்குழு தற்போது அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
மின்சார கட்டண முறையில் மாற்றம்!
தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் - தொடருந்து தொழிற்சங்கங்கம்!
இயலுமானளவு பொதுமக்கள் இரண்டு முகக் கவசங்களை அணியுங்கள் - இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ள...
|
|