பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பதால் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Tuesday, July 20th, 2021

பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது கண்டறியப்பட்ட பின்னரே, மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பு புறநகர்ப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு, டெல்டா மாறுபாடு கிராமப்புறங்களில் பரவும் அதிக ஆபத்து இருப்பதாக கோவிட் கட்டுப்பாட்டுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பேருந்துகள் மற்றும் ரயில்களில் தேவையின்றி பயணிக்கும் மக்கள் மூலம் இந்த நோய் பரவுவதற்கான ஆபத்து ஏற்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ரயில்களின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது” எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே அண்மையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து, ஆகஸ்ட் முதலாம் திகதி வரையில் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: