பயணத்தடை தளர்த்தப்படும்போது மக்கள் நடந்துகொண்ட விதம் கவலையளிக்கிறது – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Wednesday, May 26th, 2021

நாடு முழுவதும் பயணத்தடை தளர்த்தப்படும்போது மக்கள் நடந்துகொண்ட விதம் கவலையளிப்பதாக தெரிவித்துள்ள இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணயின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா. பயணத்தடையை தளர்த்தியதையிட்டு மகிழ்ச்சிப்பட முடியாத நிலையில் தாம் இருப்பதாகவும் பயணத்தடை தளர்த்தும் நடைமுறை எதிர்வரும் நாட்களல் இருகாமல்கூட போகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில் –

எதிர்காலத்தில் கடைகளைத் திறப்பதற்கு பதிலாக நாங்கள் ஒரு மாற்று நடவடிக்கையை செயற்படுத்த வேண்டியிருக்கிறது. இதன்படி மொபைல் சேவை வாகனங்களைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது

அருகிலுள்ள கடையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்பை சிலர் தவறாகப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது என்றும் இதுபோன்ற தவறான செயல்பாடுகளால் மக்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

000

Related posts: