எட்டு வருடங்களின் பின்னர் இலங்கை உள்ளிட்ட 32 நாடுகளின் தொழிலாளர்களுக்கு இத்தாலி அரசாங்கம் வழங்கியுள்ள விஷேட சலுகை!

Thursday, October 15th, 2020

எட்டு வருடங்களின் பின்னர் இத்தாலியில் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்ளீர்ப்பதற்கான சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. இந்த சுற்றறிக்கையை இத்தாலிய உள்துறை அமைச்சு கடந்த 12 ஆம் திகதி வெளியிட்டுள்ளது.

இதன்படி, இலங்கை உட்பட 32 நாடுகளின் வெளிநாட்டு தொழிலாளர்களை இத்தாலிய ஒப்பந்தக்காரர்கள் பயன்படுத்தலாம்.

அத்துடன் இத்தாலிய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின்படி, இந்த ஒதுக்கீட்டில் ஆறு இத்தாலிய ஒப்பந்தக்காரர்களின் உதவியுடன் கனரக, வாகன, ஹோட்டல், உணவகம் மற்றும் கட்டுமானத் துறைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்க முடியும்.

2006முதல் இத்தாலியில் சட்டப்பூர்வமாக நுழைந்த இலங்கையர்களுக்கு வேலை விசாக்கள் பெற வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த வேலைவாய்ப்பில் தலையிட முடியாது.

இத்தாலியிலுள்ள ஒப்பந்தக்காரர் ஒருவரின் ஒப்புதல் மற்றும் ஸ்பொன்சரின் மூலம் மட்டுமே இலங்கையர் தொழிலுக்காக இத்தாலிக்கு செல்ல முடியும்.இந்த பருவத்தின் வேலை ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்க 18,000 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒக்டோபர் 27 முதல் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும் இத்தாலிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: