பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் நாட்டில் கொவிட் தொற்றின் அபாயம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

பல மாதங்களின் பின்னர் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் நாட்டில் இன்னும் கொவிட் தொற்றின் அபாயம் முழுமையாக நீங்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்ர சில்வா எச்சரித்துள்ளார்.
அத்துடன்.மக்களின் நலனைக் கருத்திற் கொண்டே சுகாதார கட்டுப்பாடுகள் இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் நாட்டில் கொவிட் அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் நாட்டில் இன்னும் கொவிட் நோயாளர்கள் தினந்தோறும் அடையாளம் காணப்படுவதால் மக்கள் பொறுப்புணர்ந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள அவர் புதிய கொரோனா வைரஸ் திரிபுகளும் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும் கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் இராணுவத் தளபதி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|