பனை அபிவிருத்தி வாரத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனம் உற்பத்திப் பொருள் கண்காட்சி !

Friday, July 22nd, 2016

வடமாகாண விவசாயம், கால்நடை, சுற்றுச் சூழல் கூட்டுறவுத் துறை அமைச்சின் ஏற்பாட்டில் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள், பனை அபிவிருத்திச் சபை என்பன இணைந்து பனை அபிவிருத்தி வாரத்தை ,இன்று -22 ஆம் திகதி வெள்ளிக் கிழமை முதல் எதிர்வரும்-28 ஆம் திகதி வரை பனை அபிவிருத்தி வாரத்தை அனுஷ்ட்டிக்கவுள்ளது. பனை அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று வெள்ளிக் கிழமை(22) பனம் உற்பத்திப் பொருள் கண்காட்சி இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல்-3.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்தக் கண்காட்ச்சியில் பனம் கைப்பணிப் பொருட்கள் ,பனம் உற்பத்திப் பொருட்கள், என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன் கண்காட்சி  நிகழ்வின் ஒரு கட்பிடமாக விசேட காலை நிகழ்வுகளும் நடைபெறும்.

இந்தகி கண்காட்சியைப் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பார்வையிட்டுப் பயன்பெற முடியுமென ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது

Related posts: