பதவியை இராஜினாமா செய்தார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவாவி!

Wednesday, May 23rd, 2018

ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவாவி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமைச்சர் ரிசார்ட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான நவாவி, ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிக்கு வழங்கப்படும் கோட்டாவுக்கு அமைய தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல் காரணமாகவே நவாவி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேவேளை தாம் பதவி விலகியமை குறித்து எந்த கருத்துக்களை வெளியிட முடியாது என நவாவி ஊடகங்களிடம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: