பண்டிகை காலத்தில் மக்களை ஏமாற்றும் கும்பல் குறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண எச்சரிக்கை!

Tuesday, April 12th, 2022

புத்தாண்டு காலத்தில், பரிசுப் பொதிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வரும் இணைய மற்றும் ஏனைய தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

குற்றவியல் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் சிரேஷ்ட ஊடகப் பேச்சாளருமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இது குறித்து மக்களுக்கு எச்சரித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திட்டமிட்ட குழுக்கள், பண்டிகை காலத்தில் இவ்வாறு பண மோசடிகளில் ஈடுபட தயாராவது தொடர்பிலான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர் பொதுமக்கள் அவற்றுக்கு ஏமாறாமல் எச்சரிக்கையாக செயற்பட வேண்டும் எனவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இன்றுமுதல் எதிர்வரும் 13 ஆம் திகதிவரை வடமாகாணத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு - விவசாயி...
ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 867 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் - அமைச்சரவை அங்க...
கடந்த ஒரு மாதத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 வீதம் அதிகரிப்பு - உலக சுகா...