படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவின் குடும்பத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதி உதவி!
Tuesday, October 2nd, 2018படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவின் குடும்பத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் ஐம்பதாயிரம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
சிறுவர் தினத்தை முன்னிட்டு சங்கானை அமெரிக்கன் மிசன் தமிழ்கலவன் பாடசாலையில் இடம்பெற்ற சிறுவர் முதியோர் தினநிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினருமான சிவகுரு பாலகிருஷ்ணன் சிறப்ப அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
இதன்போதே ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் ஜெ.துவாரகாதேவி அவர்களுடைய முயற்சியால் சங்கானை தேவாலய வீதியினை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட எஸ்.குலநாயகம் என்பவரின் உதவியால் குறித்த நிதி உதவி வழங்கப்பட்டது.
இவ்வாண்டுக்கான சிறுவர் தினத்தினை நினைவுகூறும் முகமாக தரம் ஒன்று மாணவர்களது கரங்களால் அண்மையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜீனா அவர்களுடைய தந்தையிடம் ரூபா ஜம்பது ஆயிரம் நிதி வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|