பசுமை விவசாய கொள்கையிலிருந்து அரசாங்கம் பின்வாங்கவில்லை – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Sunday, November 28th, 2021

பசுமை விவசாயம் என்ற கொள்கையிலிருந்து அரசாங்கம் பின்வாங்கவில்லை என விவசாய அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் இயற்கை விவசாயத்தினால் நாடு அழிந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் வெளியிடப்படும் ஒரே நாடு இலங்கைதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பசுமை விவசாயத்திற்கு அரசாங்கம் மானியம் வழங்கும் என்றும், பசுமை விவசாயத்திற்கு அரசின் ஆதரவையும் தொழில்நுட்பத்தையும் வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களை உணரும் அரசாங்கம் என்ற ரீதியில், இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளோம். இதேநேரம் இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு தனியாருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

எனினும், எந்தவொரு அரச நிறுவனமும் இரசாயன உரத்தை இறக்குமதி செய்யாது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: