பசளை இறக்குமதியாளர்கள், ஒரு வாரத்திற்குள் தங்கள் கையிருப்புகளை சந்தைபடுத்த வேண்டும் – விவசாயத்துறை அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு!

Tuesday, July 6th, 2021

இரசாயன பசளை இறக்குமதியாளர்கள் தாங்கள் பதுக்கி வைத்திருக்கும் பசளை கையிருப்புகளை சந்தைப்படுத்த வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உத்தரவிட்டுள்ளார்.

இறக்குமதியாளர்கள் தற்போது ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் பசளைகளை சந்தைபடுத்தாமல் பதுக்கி வைத்திருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தநிலையில் பசளை இறக்குமதியாளர்கள், ஒரு வாரத்திற்குள் தங்கள் கையிருப்புகளை சந்தைபடுத்த வேண்டும் என அமைச்சர் மஹிந்தானந்த உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

Related posts: