பகிடிவதை சட்டம் – மனித உரிமைகள் சட்டம் என்ற தலைப்பில் கருத்தரங்கு!

Sunday, June 13th, 2021

பகிடிவதை சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்துவதற்கு கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாளி வளாகம் தீர்மானித்துள்ளது.

இதன் முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை சூம் ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெறும் என பேராசிரியர் பிரதீபா மகாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களை 077 359 62 28 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்த பேராசிரியர் பல்கலைக்கழகங்களிலிருந்து பகிடிவதையை ஒழிப்பதற்கானகூட்டு வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

பகிடிவதை சட்டமூலத்தை காலத்திற்கு ஏற்றவாறு திருத்த வேண்டியதன் அவசியமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அரச பொறிமுறை முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென பேராசிரியர் பிரதீபா மகாநாம ஹேவா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: