நெடுந்தீவில் சேவையாற்ற மருத்துவர்கள் பின்னடிப்பு!

Wednesday, March 20th, 2019

வடக்கில் 141 மருத்துவர்கள் நியமிக்கப் பட்ட போதும் யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் சேவையாற்றுவதற்கு எந்த ஒரு மருத்துவரும் முன்வரவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

வடக்கு மாகாண மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவ வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண சுகாதார அமைச்சு கொழும்பு சுகாதார அமைச்சுக்கு கோரிக்கைகளை முன்வைத்த வண்ணம் உள்ளது.

அதற்கு அமைவாக வருடாந்தம் குறைந்தளவிலான மருத்துவர்கள் வடக்குக்கு நியமிக்கப்படுகின்றனர்.அவர்கள் விண்ணப்பித்த மாவட்டத்துக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவர்.

நிரந்தரமான மருத்துவர்கள் இல்லாத நிலையிலும் சில மருத்துவ மனைகள் இயங்கி வரும் நிலையில் தீவகமான நெடுந்தீவுக்கு சேவை புரிவதற்கு மருத்துவர்கள் முன் வருவதில்லை.இதனால் அங்கு மருத்துவ சேவைகளை பெறுவதற்கு மக்கள் அல்லல் படுகின்றனர்.

இந்த மார்ச் மாதம் 141 மருத்துவர்கள் வடக்கில் நியமிக்கப்பட்டனர். அவர்களில் எவரும் நெடுந்தீவுக்கு நியமிக்கப்படவில்லை. ஓய்வுபெற்ற மருத்துவரே தற்போது மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: