நூறு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு – அரசாங்கம்!

Thursday, November 9th, 2017

நாட்டில் வாழும் நூறு வயதிற்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமாக தெரிவிக்கப்படுகின்றது..

100 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள் நாடொன்றில் இருப்பது அந் நாட்டின் சுகாதாரத்துறை அபிவிருத்தியில் காணப்பட்டுள்ள முன்னேற்றமாக கருதமுடியும். தற்பொழுது 100 வயதிற்கு மேற்பட்ட 350 பேர் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இவர்களது வாழ்க்கையை பாதுகாக்கும் நோக்கில் 100 வயதிற்கு மேற்பட்ட குறைந்த வருமானத்தை கொண்ட முதியவர்களுக்கு மாதாந்தம் 5ஆயிரம் ரூபா வழங்குவதற்கு சமூக வலுவூட்டல்கள் நலன்புரிகள் மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்பீ திசாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

Related posts: