நீர் கட்டணம் 8 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா நிலுவை – தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டு!

Saturday, February 25th, 2023

நுகர்வோரிடமிருந்து 8 ஆயிரத்து 400 மில்லியன் ரூபாய் நிலுவை கட்டணத்தை அறவிட வேண்டியுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், நீர் கட்டணம் செலுத்துவது 40 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதில் 6 ஆயிரத்து 200 மில்லியன் ரூபாய் கட்டணத்தை வீட்டு நீர் பாவனையாளர்களே செலுத்த வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், நீர் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கான பிரேரணை தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: