நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது – நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிவிப்பு!

Friday, August 14th, 2020

நீர் கட்டணங்களை அதிகரிப்பதற்கு எந்தவித தீர்மானத்தினையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் நேற்று வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீர்கட்டணங்களை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்படுமாயின், அது நீர் பாவனை அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டு மக்களுக்கு அவசியமான சுத்தமான குடீநீரை அனைவருக்கும் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Related posts: