நீர்ப்பாவனை அதிகரிப்பு – நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை!

Monday, March 26th, 2018

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையின் காரணமாக நீர்ப்பாவனை அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களில் நீர்ப்பாவனை 10 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை கோரியுள்ளது.இதேவேளை, காலநிலை மாற்றத்தினால் மின் பாவனை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாதவண்ணம் அதிகரித்துள்ளது.

கடந்த வியாழக் கிழமையில் சுமார் 2 ஆயிரத்து 500 மெகாவோட் மின்சாரத்திற்கான கேள்வி ஏற்பட்டுள்ளது.இந்த நிகழ்வு வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்ற ஒரு விடயமாகும் என மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டுள்ளார்

Related posts: