நீர்ப்பாசனத்துறையில் பாரிய புரட்சி – நீர்வள முகாமைத்துவ அமைச்சர்!

Saturday, May 20th, 2017

பாரியளவிலான குளங்களை அமைத்த மன்னர்களின் ஆட்சியின் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசாங்கம் நீர்ப்பாசனத் துறையில் பாரிய புரட்சியை மேற்கொள்வதாக நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

நீர்ப்பாசன அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,ஐந்து குளங்களை மறுசீரமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சிறியளவிலான 100 குளங்களை புனரமைத்துள்ளதோடு, அணைகளை உறுதிப்படுத்தி, குளங்களின் கொள்ளளவை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts: