நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியமை குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் பணிப்பு!

Monday, October 2nd, 2023

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியமை குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இன்று திங்கட்கிழமை அவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டுச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா 20ஆம் திகதியே நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

மேலும் நீதிபதி சரவணராஜா இப்போது எங்கே இருக்கின்றார் என்பதை இலங்கை உளவுப் பிரிவு மற்றும் இந்திய உளவுப் பிரிவும் தேடி வவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள.

மேலும், மிகவும் சிறப்பாக செயற்பட்டு அவர் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதுடன் அவர் முதலில் சிங்கப்பூர் சென்றதாகவும் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


தென்னை மரங்களை வெட்ட பிரதேச செயலாளரின் அனுமதி பெறுவது அவசியம் –- தெங்கு, கித்துள், பனை தொடர்பான இராஜ...
கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களை அச்சுறுத்தினால், அவர்களுக்கு எதிராக சட்டத்தினை கடுமைய...
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறினால் முன்னர் எதிர்கொண்ட சிரமங்களை நாடு மீண்டும் ஒருமுறை எதிர்கொ...